The Music School

அறிமுகம்

நம் எல்லோருக்கும் இசையைக் கற்றுக்கொள்ளும் விருப்பம் இருக்கிறது.
ஆனால் எத்தனைபேருக்கு விரும்பியவுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது?


எனவே விரும்பியவுடன் உங்கள் வீட்டில் இருந்தே இசையின் அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான பாடத்திட்டங்களுடன் The Music School துவங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய இசைக்குறிப்புகளை ( Notations) படிக்கவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்கு  வசதியாக இதன் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இசைப்பயிற்சியில் நீங்கள் மாணவராகச்சேர்வதன் மூலம் மேற்கத்திய இசையின் அடிப்படைகளை முழுமையாகக் கற்றுக்கொண்டு keyboard வாசிக்கும் திறமையைப் பெற முடியும்.

நீங்களோ உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் நண்பர்களோ இசை கற்க விரும்பினால் The Music School உங்களின் அற்புதமான தேர்வாக இருக்கும்.

எல்லோரும் இசை கற்க உதவும் வகையில் இசைப் பாடங்கள் குறித்தும்,கல்வி வளர்ச்சிகள் குறித்தும் ஆய்வுகளை நடத்த உதவும் READ அறக்கட்டளையின் ஓர் அங்கமாக தி மியூசிக் ஸ்கூல் இயங்குகிறது.

இசைப் பயிற்சியின் இயக்குனர் - பிரேமா செழியன்.
பொருளாதாரத்தில் முதுகலையும் கணினி இயலும் படித்தவர்.ஆசிரியர்
பயிற்சிக் கல்வியுடன் மேற்கத்திய இசையும் கற்றவர்.இந்நூலை எளிய பயிற்சிகளுடன் முழுமையான பாடத்திட்டமாக வடிவமைத்தவர்.

நூலின் ஆசிரியர் - செழியன்.
திரைப்பட ஒளிப்பதிவாளர்.எழுத்தாளர்.லண்டன் டிரினிடி கல்லூரியின் மேற்கத்திய இசைக்கான மேல் நிலைத்தேர்வில் சிறப்புத்தகுதியுடன் தேர்ச்சி பெற்றவர். இலக்கியத்திற்காக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருதும் சிறந்த சிறுகதைக்கான "கதா" தேசிய விருதும் ,சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சர்வதேச விருதும் பெற்றவர். ஆனந்த விகடன் வார இதழில் "உலக சினிமா" தொடரை எழுதியவர். திரைப்படம் இலக்கியம் சார்ந்த எட்டு நூல்களின் ஆசிரியர். தி மியூசிக் ஸ்கூலின் நிறுவனர்.