விரலினை உறுதி செய்க

விரலினை உறுதி செய்கஉடலினை உறுதி செய் ‘என்றார் பாரதி.இசைக் கருவிகளை வாசிக்கும் நாம் விரல்களை உறுதி செய்ய வேண்டும்.கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் உடலின் மேல்பகுதியை உறுதி செய்ய எடை தூக்கும் பயிற்சியைச் செய்கிறார்கள்.கிரிக்கெட் வீரர்கள் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக கால்களை உறுதி செய்கிறார்கள். அதுபோல நாம் வாசிக்கும் இசையை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் வாசிக்க எளிதில் களைத்துவிடாமல் விரல்களைப் பழக்கவேண்டும்.

அதற்கு விரல்களுக்கென நம் பாடத்தில் இருக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒருமுறை இசைக்கலைஞர் பீதோவன் ‘நான் எப்போதும் பயிற்சி செய்யமாட்டேன். ஈடுபாட்டுடன் வாசிப்பேன்.’என்றார். பயிற்சி செய்வதற்கும் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப்புரிந்துகொள்ள வேண்டும்.

எளிய பயிற்சியாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடன் நாம் புதிதாக ஒரு இசையை உருவாக்குகிறோம் என்ற படைப்பு மனநிலையில் வாசியுங்கள்.

‘நான் ஒருவாரம் வாசிக்கவில்லையென்றால் என் ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.ஒருநாள் வாசிக்கவில்லையென்றால் என் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார்’என்று சொல்கிறார் பிரபலமான பியானோ கலைஞர் வியாட்ஸ்லோவ் ரிக்டர்.

எனவே தினமும் பயிற்சி செய்யுங்கள்.விரல்களை உறுதி செய்யுங்கள்

Leave a Comment.