The Music School

பயிற்றுவிக்கும் முறை

The Music School ன் இசைப்பாடங்கள் பத்துவயதில் இருந்து பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக உள்ளன. பதினைந்து வருட ஆய்வுக்குபிற்கு இதன் பாடங்கள் எளிமையான தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.

எளிய பாடங்கள்
1700 பக்கங்கள்.
பத்து நூல்கள்
200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள்
ஒவ்வொரு நாளும் ஒரு பாடம்
தினமும் முப்பது நிமிடங்கள்

ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் பயிற்சித் தாள்களும் ( worksheet), உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ள தேர்வுத் தாள்களும் இருக்கின்றன.

இசை - பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட கலை என்பதால் தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் (Audio Examples)இருக்கின்றன. அந்த உதாரணங்களை இந்த இணையதளத்தின் Audio Examples பகுதியை அழுத்தினால் நீங்கள் கேட்கலாம்.

சந்தேகம் எந்த இடத்திலும் வராதவாறு Audio Examples உடன் எழுதப்பட்டிருப்பதே இந்தப் பாடங்களின் சிறப்பு. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல கலந்துரையாடல் மொழியில் பயிற்சிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. பாடத்தின் இடையில் எந்த இடத்தில் சந்தேகம் வந்தாலும் பள்ளியின் முகவரிக்கு கடிதம் எழுதியோ அல்லது master@themusicschool.co.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பியோ விளக்கம் பெறலாம்.

பயிற்சியின் சிறப்புகள்

  • 1. மேற்கத்திய இசையின் அடிப்படையான மற்றும் மேல்நிலைப் பாடங்கள் எளிமையான தமிழில் இருக்கின்றன.
    2. முழுக்க ஒரு வகுப்பறையில் இருப்பதுபோல பாடங்கள் கலந்துரையாடல் மொழியில்  இருக்கின்றன.
    3. ஒவ்வொரு பாடத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் இருக்கின்றன.
    4. ஒலி உதாரணங்கள் இருக்கின்றன.
    5. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஒரு இணையதளம் இருக்கிறது.
    6. ஒவ்வொரு பாடத்திலும் விரிவான பயிற்சித்தாள்கள்,தேர்வுதாள்கள்,வாசிக்கும் பயிற்சிகள் இருக்கின்றன.
    7. மேற்கத்திய இசைக்குறிப்புகளை படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும் விதத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


பயிற்றுவைக்கும் முறை
மேற்கத்திய இசையின் கூறுகளை பதினைந்து வருடங்களாக ஆய்வு செய்து, இசை தெரியாத யாரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட பாடங்கள் இந்தப் பத்து நூல்களிலும் இருக்கின்றன.

ஒரு நாளில் ஒரு பாடம் என்ற வகையில் மிகவும் புதுமையான முறையில் இசைப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாடத்தின் எந்த நிலையிலும் சந்தேகம் வராதவாறு எழுதப்பட்டுள்ளது இந்த நூல்களின் சிறப்பு.இந்தப் பயிற்சியின் பத்து நூல்களையும் நிறைவு செய்யும்போது மேற்கத்திய இசைக்குறிப்புகளை (Music Notations) உங்களால் படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும்.சந்தேகம் வந்தால் அலுவலக நேரத்தில் (காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை)தொலைபேசி மூலமாக உங்கள் பதில்களைப்பெற முடியும்.அல்லது மின்னஞ்சல், கடிதம் வழியாகவும் விளக்கங்களைப் பெறமுடியும்.

மேற்கத்திய இசையில் உலகம் முழுக்கத்தேர்வுகள் நடத்தும் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியின் இசைக்கான தேர்வுகளை எழுத விரும்பினால் அதற்கும் The Music School உங்களை வழி நடத்துகிறது.ஏனெனில் டிரினிடியின் தியரிகளுக்கான தேர்வில் மூன்றாம் நிலையை( III rd Grade Theory) எளிதாகத் தேர்ச்சியடையும் வகையிலும் இந்தப் பாடங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன என்பதுதான் The Music School ன் சிறப்பு.

நம் பயிற்சியில் சேர்ந்த பல மாணவர்கள் தியரிக்கான தேர்வில் சிறப்புத்தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். (பார்க்க- Testimonials- கருத்துக்கள்) இவர்கள் யாரும் இதற்குமுன் இசை அனுபவமே இல்லாமல் The Music School ன் நூல்களைப் படித்து இசைக்கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் இதில் பெருமைக்குரிய விஷயம்.

மேலும் The Music School ன் பத்து நூல்களில் ஐந்து நூல்களைப் படித்ததும் -பயிற்சியில் சேர்ந்து ஆறுமாதத்தில்-நீங்கள் டிரினிடியில் முதல் நிலைத் தேர்வு எழுதும் தகுதியைப் பெறுவீர்கள்.

அப்போது நீங்கள் தேர்வு எழுத விரும்பினால் தேர்வுக்கான மூன்று நேரடியான வகுப்புகளில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்.அந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உங்களுக்கு வசதியான நேரத்தை நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.The Music School ன் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மாதிரித்தேர்வுகள் நடத்தி உங்களை வழி நடத்துவார்கள்.